கொலை செய்ய கிச்சன் கத்தி.. யாருக்குமே சந்தேகம் வரல..!! இதுதான் நடந்துச்சு..! - சுப்ரியா சாஹு விளக்கம்
கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் நடத்திய இளைஞர், கிட்சன் கத்தி மூலம் மருத்துவரைத் தாக்கியதாகவும் அவர் வழக்கமாக மருத்துவமனைக்கு வருபவர் என்பதாலேயே யாரும் அவர் மீது சந்தேகப்படவில்லை என்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் செயலாளர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், "நாட்டின் பிற பகுதிகளில் மருத்துவர்கள் மீது பல முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. அதைக் கருத்தில் கொண்டு நாங்கள் ஏற்கனவே மருத்துவமனைகளில் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தோம். தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுத்து இருந்தோம். அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவுக்குப் பலர் வருவார்கள். பொதுவாக அரசு மருத்துவமனைக்கு அதிக பேர் வருவார்கள் என்பதால் விசிட்டர் பாஸ் நடைமுறை இருக்காது. ஆனால், நாங்கள் பல மருத்துவமனைகளில் விசிட்டர் பாஸ் முறையையும் செயல்படுத்தி இருக்கிறோம்.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் தேவையான பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் போலீசார் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் இணைந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகளில் போதிய பாதுகாப்பு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்துள்ளோம். மருத்துவமனைகளில் உள்ள சிசிடிவி கேமரா, பாதுகாவலர்கள் என அனைத்தையும் உறுதி செய்துள்ளோம்
இந்த சம்பவத்தில் தாக்குதல் நடத்திய நபரின் தாய் இந்த மருத்துவமனையில் தான் கேன்சர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருடன் இந்த நபரும் உடன் வருவார் என்பதால் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. சாதாரணமாக மருத்துவமனைக்குள் நுழைந்த அவரது கையில் கிட்சன் கத்தி ஒன்று இருந்துள்ளது. அதை வைத்துக் கொண்டே அவர் மூத்த மருத்துவர் பாலாஜி மீது தாக்குதல் நடத்தியுள்ளார். டாக்டர் பாலாஜிக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவர் குணமடைந்து வருகிறார்.. இதுவே இன்று நடந்தது" என்றார்.
Read more ; அரசு மருத்துவருக்கு கத்திக் குத்து… இந்த ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு இல்ல.. தவெக தலைவர் விஜய் காட்டம்…!