முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’ஆயுதமேந்திய போராட்டம் முடிந்தது’..!! ’இனி சட்டப்போராட்டம் தொடரும்’..!! பிரபாகரன் மகள் துவாரகா பரபரப்பு வீடியோ..!!

07:17 AM Nov 28, 2023 IST | 1newsnationuser6
Advertisement

பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் மகள் உரையாற்றிய வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இலங்கையில் நடைபெற்ற தமிழர்களுக்கு எதிரான போரில், ஈழத்தில் வசித்துவந்த இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் இலங்கை அரசால் கொல்லப்பட்டனர். கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த இலங்கை போரின் தாக்கம் தற்போது வரை தமிழக மக்களிடையே இருந்து வருகிறது. அங்கு ஆயுதமேந்திய போராட்டத்தை நடத்திய விடுதலைப்புலிகள் அமைப்பின் நிறுவனர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டார்.

விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாக இந்தியா, இலங்கை, அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளால் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபாகரனின் மகனும் இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா நிலை என்பது இறுதி வரை தெரிவிக்கப்படவில்லை. சமீபத்தில், வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக தமிழ்நாட்டில் வசித்துவரும் சில தமிழ் தேசியவாதிகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா, காணொளி வாயிலாக உரையாற்றவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அதுதொடர்பாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இது ஏஐ எனப்படும் தொழில்நுட்பம் சார்ந்த எடிட் செய்யப்பட்ட வீடியோவா?. உண்மையில் பிரபாகரனின் மகள் உயிருடன் இருந்து, தற்போது காலச்சூழல் காரணமாக பொதுவெளியில் உரையாற்றுகிறாரா? என்பது தெரியவில்லை.

இந்த வீடியோவில், "இதுநாள் வரை தனக்கு துணைநின்ற தமிழீழ, தமிழ் உறவுகளுக்கு நன்றி. நாங்கள் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் இல்லை. தமிழீழம் கேட்கும் உரிமைக்குரல் என்றும் ஓயாது. ஆயுதமேந்திய போராட்டம் கைவிடப்பட்டது. இனி சட்டப்போராட்டம் தொடரும். இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு எதிராக ஐ.நா மன்றத்தில் தொடர்ந்து குரல்கொடுத்து வந்தவர்களுக்கு நன்றி. இலங்கை விவகாரத்தில் இனப்படுகொலையை ஐ.நா. உறுதி செய்தாலும், தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கவில்லை.

நாங்கள் இலங்கையில் உள்ள சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் கிடையாது. அரசு இயந்திரத்தை தங்களின் கைகளில் வைத்துக்கொண்டு, தமிழ் மக்கள் - சிங்கள மக்களுக்கு இடையே இதுநாள்வரை பல பிரச்சனையை ஏற்படுத்திவிட்டனர். எங்களின் சட்டப்போராட்டம் தொடரும். பாதைகள் மாறினாலும் இலட்சியம் மாறாது. புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்" என பேசியுள்ளார். https://tamiloli.net/ என்ற இணையதளத்தில் இந்த வீடியோ வெளியாகியுள்ளன. மேலும், இந்த இணையதளத்தின் நிர்வாகிகள் சுவிச்சர்லாந்து நாட்டில் வசித்து வருவதும் உறுதியாகியுள்ளது.

Tags :
இலங்கைஇலங்கை மக்கள்ஈழம்தமிழ் மக்கள்துவாரகாபிரபாகரன்மதிவதனிவேலுப்பிள்ளை பிரபாகரன்
Advertisement
Next Article