முக்கிய அறிவிப்பு...! 4 மாவட்டத்தில் அனைத்து அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு...!
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 4 மாவட்டங்களிலும் இன்று காலை 8.30 மணி வரை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தற்போது அரையாண்டு தேர்வு நடந்து வருகிறது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடரும் கனமழையானது பெய்து வருகிறது. இதன் காரணமாக மேற்கண்ட மாவட்ட மாணவர்களால் இன்று நடைபெறும் அரையாண்டு தேர்வை எழுத முடியாத சூழல் உள்ளது.
எனவே நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டத்தில் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பது மற்றும் மறு தேதியில் நடத்துவது குறித்து அந்தந்த மாவட்ட கல்வி முதன்மை அலுவலர்களே முடிவு எடுத்துக்கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதே போல நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.