For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கோடியில் புரளும் பீஸ்ட் பட நடிகை!… புது வீடு இத்தனை கோடியா?

08:00 AM Apr 16, 2024 IST | Kokila
கோடியில் புரளும் பீஸ்ட் பட நடிகை … புது வீடு இத்தனை கோடியா
Advertisement

Pooja Hegde: நடிகர் ஜீவா நடிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான 'முகமூடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இந்த படம் ஓரளவுக்கு ரசிகர்களை ஈர்த்தாலும், பூஜாவை ரசிகர்கள் பெரிதாக கவனிக்கவில்லை என்றே சொல்லலாம். தமிழில் பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் பிற மொழி படங்களில் பிஸியாக நடித்து வந்தார். இவர் அல்லு அர்ஜூனுடன் நடித்த வைகுண்டபுரம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த படத்தில் வந்த புட்ட பொம்மா பாடல் பெரிய வெற்றியை கொடுத்தது.

Advertisement

முகமூடி படத்தை தொடர்ந்து ஒரு பெரிய இடைவெளிக்கு பின் பூஜாவுக்கு தமிழில் நல்ல கதையம்சம் கொண்ட பட வாய்ப்பு கிடைத்தது.நெல்சன் இயக்கத்தில் வெளியன் 'பீஸ்ட்' படத்தில் கதாநாயகியாக தமிழில் மீண்டும் என்ட்ரி கொடுத்தார். இப்படத்தில் பூஜாவுக்கு முக்கிய கதாபாத்திரம் கிடைக்க, ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் கிடைத்தது. இந்த படத்திற்கு பிறகு தமிழில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என பூஜா எதிர்பார்க்க, அது ஏமாற்றத்தில் முடிந்தது. தமிழில் பெரிதும் வாய்ப்புகள் கிடைக்காததால் வேறு மொழிகளில் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.

தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் அதிகம் நடித்து வருகிறார். அந்தவகையில் இறுதியாக நடிகர் சல்மான் கானுடன் ’கிசி கா பாய் கிசி கா ஜான்’ என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால் இப்படம் பெரியளவில் ரசிகர்களை ஈர்க்க தவறியது. தற்போது தேவா என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில், மும்பையில் புதிதாக பிரம்மாண்டமான பங்களா ஒன்றை விலைக்கு வாங்கி இருக்கிறார் நடிகை பூஜா ஹெக்டே.

இந்த பங்களாவின் மதிப்பு 40 கோடி ரூபாய் என்று தகவல் வெளியாகி உள்ளது. எதிரில் கடலைப் பார்த்தபடி இந்த பங்களா அமைந்துள்ளதால் இந்த பிரமாண்ட பங்களா மிக அழகிய தோற்றத்தில் காணப்படுகிறது. சமீபத்தில் தான் பூஜா ஹெக்டே புதிதாக விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்று வாங்கி இருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது 40 கோடி ரூபாய் விலையில் புதிய பங்களா ஒன்றையும் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Readmore: வாவ்…! தென்மேற்குப் பருவமழை.. நாடு முழுவதும் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்பு…!

Advertisement