For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Public Exam 2024: கவனம்...! நாளை முதல் மார்ச் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது 12-ம் பொதுத் தேர்வு...!

06:20 AM Feb 29, 2024 IST | 1newsnationuser2
public exam 2024  கவனம்     நாளை முதல்  மார்ச் 22 ம் தேதி வரை நடைபெற உள்ளது 12 ம் பொதுத் தேர்வு
Advertisement

12-ம் பொதுத் தேர்வு நாளை தொடங்கி மார்ச் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த ஆண்டுக்கான 12-ம் பொதுத் தேர்வு நாளை தொடங்கி மார்ச் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கு நாளை தேர்வு நடைபெறும். இந்த தேர்வை தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,302 மையங்களில் 7.25 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 47 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

Advertisement

முறைகேடுகளை தடுக்க 4,200 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர்,வருவாய் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் ஆயுதம் ஏந்திய போலீஸார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்வுகள் முறையாக நடைபெற ஏதுவாக, தேர்வுத் துறையால் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பறை வசதிகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வு அறைக்குள் செல்போன் உள்ளிட்ட மின்சாதனங்களை கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை மாணவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்

English Summary : The 12th general examination will be held from tomorrow till March 22.

Advertisement