முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பிரதமர் மோடிக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து..!! ஆனால் இதுவரை ஆளும்கட்சிக்கு வாழ்த்து சொல்லாதது ஏன்..?

Tamil Nadu Vethi Kazhagam President Vijay has congratulated Narendra Modi who has been sworn in as Prime Minister for the 3rd term.
07:10 AM Jun 10, 2024 IST | Chella
Advertisement

பிரதமராக 3-வது முறையாக பதவியேற்றுள்ள நரேந்திர மோடிக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

லோக்சபா தேர்தலில் 240 சீட்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக, என்டிஏ கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. மோடி நேற்று 3-வது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றார். நேருவுக்குப் பிறகு நமது நாட்டில் ஒருவர் 3-வது முறையாகப் பதவியேற்பது இதுவே முதல்முறையாகும். அவருடன் மற்ற அமைச்சர்களும் பதவியேற்றனர். இப்படி மொத்தம் 72 பேர் அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

இதையடுத்து, நரேந்திர மோடிக்கு பல்வேறு தலைவர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகரும் அரசியல்வாதியுமான விஜய்யும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக வெற்றி கழக விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரதமராகத் தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பதவியேற்ற நரேந்திர மோடிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார். அதேநேரம் தமிழ்நாட்டில் 40க்கு 40 தொகுதிகளில் திமுக கூட்டணி வென்றதற்கு விஜய் இதுவரை வாழ்த்து சொல்லவில்லை என்று நெட்டிசன்கள் சிலர் விமர்சித்து வருகின்றனர்.

Read More : நாம் தமிழர் கட்சியுடன் தவெக கூட்டணி..? விஜய் என்ன சொன்னார்..? புஸ்ஸி ஆனந்த் பரபரப்பு பதில்..!!

Tags :
DmkPM Moditvk vijayvijay
Advertisement
Next Article