For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அதென்ன 'ராம் கி பாடி'!… பெயராவே இருந்தாலும் ஒரு அர்த்தம் வேண்டாமா?… தமிழ் பெயர் பலகையின் விமர்சனம்!

09:47 AM Jan 13, 2024 IST | 1newsnationuser3
அதென்ன  ராம் கி பாடி  … பெயராவே இருந்தாலும் ஒரு அர்த்தம் வேண்டாமா … தமிழ் பெயர் பலகையின் விமர்சனம்
Advertisement

அயோத்தி ராமர் கோயிலுக்கு வருகை தரும் தமிழகத்தை சேர்ந்த பக்தர்களின் வசதிக்காக வைக்கப்பட்டுள்ள பெயர் பலகை கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

Advertisement

அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. பாபர் மசூதியை இடித்த பிறகு, நீண்டகாலமாக சட்டப்போராட்டம் நடத்தி அதில் வெற்றி கண்டதற்கு பிறகு இந்த ராமர் கோயில் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்தக் கோயிலின் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறவுள்ளது.

இந்தநிலையில், ராமர் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக புதிதாக ரயில் நிலையமும், விமான நிலையமும் அங்கு திறக்கப்பட்டிருக்கின்றன. மேலும், அயோத்தியில் எங்கு இருந்தாலும், அங்கிருந்து ராமர் கோயிலுக்கு பேருந்துகள் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், இன்றைக்கு அயோத்தியில் 28 மொழிகளில் ராமர் கோயிலுக்கு செல்லும் திசையை காட்டுவதற்காக பெயர் பலகைகள் அமைக்கப்பட்டன. இதில் தமிழ் மொழியும் இடம்பெற்றிருக்கிறது.

ஆனால், அதில் ராமர் கோயில் என எழுதுவதற்கு பதிலாக 'ராம் கி பாடி' என எழுதப்பட்டுள்ளது. அதாவது, இந்தியில் ராமர் கோயில் என்பதே இதன் அர்த்தம் ஆகும். ஒரு மொழியில் பெயர்ப்பலகை வைக்கப்படுகிறது என்றால் அந்த மொழியில் அர்த்தம் இருக்க வேண்டும். அதை விடுத்து, இந்தி மொழியை தமிழில் டப் செய்து எழுதுவது போல எழுதப்பட்டிருப்பதாக தமிழ் ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர். மேலும், இதனை உடனடியாக மாற்றி ராமர் கோயில் என்று எழுத வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் 'ராம் கி பாடி' என எழுதப்பட்டிருக்கும் பெயர் பலகையை நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளி வருகின்றனர்.

Tags :
Advertisement