For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தப்பான பழக்கத்தால் மார்க்கெட் போன சதா..! இது தான் காரணம் என போட்டு உடைத்த பயில்வான்...!

09:35 AM Apr 29, 2024 IST | shyamala
தப்பான பழக்கத்தால் மார்க்கெட் போன சதா    இது தான் காரணம் என போட்டு உடைத்த பயில்வான்
Advertisement

நடிகை சதாவிற்கு தப்பான பழக்கம் இருப்பதாகவும், அதனால் மார்க்கெட்டை இழந்தார் என பயில்வான் அதிர்ச்சி தகவல்கள் தெரிவித்துள்ளார்.

Advertisement

மூத்த பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன், பல நடிகர், நடிகைகளின் அந்தரங்கமான பல விஷயத்தை ஒளிவுமறைவு இல்லாமல் பேசி வருகிறார். அந்த வகையில், நடிகை சதா குறித்து, சில அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை சதா. ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் இவர் பேசிய 'போயா போ' வசனம் இவரை பெரியளவில் தூக்கிவிட்டது. அதை தொடர்ந்து, ஷங்கர் இயக்கிய அந்நியன் படத்திலும், அஜித், மாதவன் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்ததார்.  மார்க்கெட் சுத்தமாக குறைந்துபோனதால், எலி என்ற படத்தில் வடிவேலுவிற்கு ஜோடியாக நடிக்க வேண்டிய நிலைக்கு போனார். அதனை தொடர்ந்து, டார்ச் லைட் என்ற படத்தில் விலைமாதுவாக நடித்தார். இந்த படத்திற்கு பிறகு இவரின் இமேஜ் மொத்தமாக டேமேஜ் ஆகிவிட சுத்தமாக படவாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.

 பட வாய்ப்பே இல்லாத நடிகை சதா, சமூக ஊடங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். மேலும், அவ்வப்போது போட்டோகளை ஷேர் செய்து வருகிறார். இந்த நிலையில், பயில்வான் ரங்கநாதன் சதாவிற்கு சினிமாவில் மார்க்கெட் போனதற்கான காரணத்தை போட்டு உடைத்துள்ளார். அதில், சதாவிற்கு புகைப்பிடிக்கும் தப்பான பழக்கம் இருப்பதாகவும், ஷூட்டிங் சமயத்தில் கூட புகைப்பிடித்துக்கொண்டே இருப்பார். இதை நானே நேரில் பார்த்து இருக்கிறேன் என்றார். அந்த தப்பான பழக்கத்திற்கு அவர் அடிமையாக இருந்தால் தான், அவருக்கு மார்க்கெட் குறைந்தது என்று பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

Central Govt | தொற்று நோய் அபாயம்.!! மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு.!!

Advertisement