”நான் சீக்கிரம் உடல் நலம் பெற வாழ்த்திய அனைவருக்கும் நன்றி”..!! நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை..!!
ரஜினிகாந்த் வேட்டையன் படத்தை நடித்து முடித்து தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், ஹைதராபாத் படப்பிடிப்பில் இருந்து ரஜினிகாந்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ரஜினியின் அடிவயிற்றுக்கு அருகே ரத்த நாளம் பெரியதாக உள்ளதால், அதற்கான சிகிச்சை எடுக்கப்பட்டது. இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயிலும் வீக்கம் இருந்தது. பின்னர், அதற்கான STENT பொறுத்தப்பட்டு சிகிச்சை முடிந்தது. சிகிச்சை முடிந்தாலும் ரஜினி ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். 3 நாட்கள் சிகிச்சை முடிந்து ரஜினிகாந்த் இன்று வீடு திரும்பினார்.
இந்நிலையில், நான் மருத்துவமனையில் இருக்கும்போது, எனது நலன் விசாரித்து, நான் சீக்கிரம் குணமடைய வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிரதமர் மோடி, அமிதாப் பச்சன் ஆகியோருக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நான் மருத்துவமனையில் இருக்கும்போது, நான் சீக்கிரம் உடல் நலம் பெற என்னை வாழ்த்திய அனைத்து அரசியல் நண்பர்களுக்கும், திரைப்பட துறையை சார்ந்தவர்களுக்கும், எனது அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
நான் நலம் பெற பிரார்த்தனைகள் செய்த, மனதார வாழ்த்திய என் மீது அளவில்லா அன்பு வைத்திருக்கும் என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும், அனைத்து மக்களுக்கும் எனது உளமார மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.