முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பரபரப்பு..! தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சஸ்பெண்ட்...! ஆளுநர் அதிரடி உத்தரவு...!

Thanjavur Tamil University Vice-Chancellor suspended
05:36 AM Nov 21, 2024 IST | Vignesh
Advertisement

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவள்ளுவனை பணியிடை நீக்கம் செய்து ஆளுநர் ரவி உத்தரவு.

Advertisement

தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தராக டாக்டர் வி.திருவள்ளுவன் கடந்த 2021ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்த நிலையில், இவர் வரும் டிசம்பர் 12ம் தேதியுடன் ஓய்வு பெற இருக்கிறார். இந்த நிலையில், துணைவேந்தர் திருவள்ளுவன் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் உள்ள காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்ற இவருக்கு, ஆளுநர் மாளிகையில் இருந்து வந்த உத்தரவு குறித்த தகவலை தஞ்சை தமிழ் பல்கலைக்கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு, தனது சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றார்.

பணம் பெற்றுக்கொண்டு உரிய கல்வித் தகுதி இல்லாத 40 பேரை பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களில் அமர்த்தியதாக எழுந்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கற்பித்தல் சேவையில் 28 ஆண்டுகள் அனுபவம் கொண்ட இவர், 5 ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். தேசிய கல்வி-ஆராய்ச்சி நிகழ்வுகளில் 4 கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். இயக்குனர், மொழியியல் துறை டீன் போன்ற பொறுப்புகளை வகித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கமிட்டி ஒருங்கிணைப்பாளராகவும், பதிவாளராகவும், சிண்டிகேட் உறுப்பினராகவும், புதுச்சேரி மொழியியல் - கலாசார மையத்தின் வழிகாட்டு உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.

Tags :
rn raviTamil UniversityThanjavurtn governmentVice chancellorசென்னைதமிழ்நாடு அரசு
Advertisement
Next Article