For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

#தலைவர்விஜய்!... ட்ரெண்டாகும் ஹேஷ் டேக்!… அறிவிப்புக்கு தயாராக இருக்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்!

07:25 AM Feb 02, 2024 IST | 1newsnationuser3
 தலைவர்விஜய்     ட்ரெண்டாகும் ஹேஷ் டேக் … அறிவிப்புக்கு தயாராக இருக்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்
Advertisement

விஜய் மக்கள் இயக்கத்தை புதிய கட்சியாக பதிவு செய்வதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், #தலைவர்விஜய் என்ற ஹேஷ் டேக் ட்ரெண்டாகி வருகிறது.

Advertisement

விஜய் மக்கள் இயக்கம் புதிதாக தொடங்கப்பட உள்ள கட்சியின் தலைவராக நடிகர் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடிகர் விஜய் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு அனைத்து மாவட்ட முக்கிய நிர்வாகிகளிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. விஜய் மக்கள் இயக்கத்திற்கு உறுப்பினர்கள் சேர்ப்பதற்காக இருந்த (விமஇ) என்கிற app தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

புதிதாக கட்சி தொடங்கப்பட்ட பிறகு புதிதான ஒரு app நிறுவப்பட்டு அதன் மூலம் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தொடங்கப்பட உள்ளது. விஜய் மக்கள் இயக்கம் புதிதாக தொடங்கப்பட உள்ள கட்சியின் பெயர் தமிழக முன்னேற்ற கழகம் என ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தை புதிய கட்சியாக பதிவு செய்ய புஸ்ஸி ஆனந்த் தலைமையில் முக்கிய நிர்வாகிகள் வருகிற 4-ம் தேதி டெல்லி செல்கின்றனர்.

இந்நிலையில், நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் Goat திரைப்படத்தை விட புதிதாக தொடங்கப்பட உள்ள கட்சிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Goat – திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்ற பிறகு திரைப்படம் வெளிவருதற்கு முன்பாக புதிதாக தொடங்கப்பட உள்ள கட்சியின் சார்பாக மதுரை அல்லது திருச்சியில் மாநாடு நடைபெற உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும், நடிகர் விஜய்யின் அரசியல் நுழைவுக்கான அனைத்து நகர்வுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான அறிவிப்புகள் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இந்தநிலையில், #தலைவர் விஜய் என்ற ஹேஷ் டேக்கினை அவரது ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் டெண்டாக்கி வருகின்றனர். மேலும் அரசியல் வருகை குறித்த அறிவிப்புக்கு தயாராக இருக்குமாறு மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு நேற்று அறிவிப்பு கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Tags :
Advertisement