For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

2 மணிநேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்த தலைவர் 171 டைட்டில்

08:41 PM Apr 22, 2024 IST | 1newsnationuser8
2 மணிநேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்த தலைவர் 171 டைட்டில்
Advertisement

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிக்கவுள்ள தலைவர் 171வது படத்தின் பெயர் டைட்டில் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் ராஜா இயக்கத்தில் நடிகர் ரஜினி 170வது படமான வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் நடிகர் ரஜினி தனது 171வது படத்தில் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதில், RX பைக்கில் சத்தத்துடன் கொள்ளையர்களின் கூடாரத்திற்கு வரும் ரஜினி, சட்டரை உடைத்து மாஸ் எண்ட்ரி கொடுக்கிறார். தலைவர் மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளதால் ரசிகர்களை வைப் மோடுக்கு கொண்டு சென்றது என்றே கூறலாம். தங்கக் கட்டிகள், தங்கக் கடிகாரங்கள் எனத் தங்கக் கொள்ளையை இப்படம் மையமாகக் கொண்டுள்ளது. அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு 'கூலி' என பெயரிட்டுள்ளது. மேலும், வின்டேஜ் ரஜினியின் புகழ்பெற்ற, "சோறு உண்டு, சுகம் உண்டு, மது உண்டு, மாது உண்டு, மனம் உண்டு என்றாலே சொர்க்கத்தில் இடமுண்டு போடா' என்ற வசனமும் இதில் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியான 2 மணிநேரத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களுக்கும் அதிகமானோரை
கடந்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

43 வயதில் திருமணம் செய்தது ஏன்’..? முதல்முறையாக மனம் திறந்த நடிகை லாவண்யா..!!

Advertisement