தல தோனி வரலாற்று சாதனை!… ஐபிஎல்லில் மிகப்பெரிய மைல்கல்லை எட்டிய முதல் இந்தியர்!
Dhoni record: மும்பை அணிக்கு எதிரான 29வது லீக் போட்டியில் அதிரடியாக விளையாடி ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசிய தோனி வரலாற்று சாதனைகளை படைத்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் பெரும்பான்மையான ரசிகர்கள் கவனிக்கும் வீரர்களில் முதல் இடத்தில் இருப்பவர் சென்னை அணியின் வீரர் மகேந்திர சிங் தோனி தான். தோனி களமிறங்கினால் மட்டும் போதும், என ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ஐபிஎல் 2024 டி20 தொடரில் நேற்று இரவு மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் 29வது லீக் போட்டி நடைபெற்றது.
முன்னதாக இப்போட்டியில் சிஎஸ்கே அணிக்காக 250வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையை தோனி படைத்தார். 17 வருட ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் எதிர்கொண்ட முதல் 3 பந்துகளிலும் 3 சிக்சர் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும் இந்த மைல்கல் போட்டியில் அடித்த இந்த 20 ரன்களையும் சேர்த்து ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக சுரேஷ் ரெய்னாவுக்கு பின் 5000 ரன்கள் அடித்த 2வது வீரர் என்ற சாதனையும் தோனி படைத்துள்ளார். மேலும், இந்த போட்டியில் தோனியின் 500 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் க்ருனால் பாண்டியாவின் சாதனையை சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Readmore: ”தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகள் அடித்து நொறுக்கப்படும்”..!! வேல்முருகன் அதிரடி..!!