முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

'மன அழுத்தம்..' எலான் மஸ்கிடம் இனி வேலை செய்ய முடியாது..!! - துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்த இந்திய பெண்..!!

Tesla's vice president has resigned, saying it was too difficult to work for Elon Musk.
07:00 PM Aug 23, 2024 IST | Mari Thangam
Advertisement

எலான் மஸ்கிடம் வேலை செய்வது மிகவும் கடினம் எனக் கூறி டெஸ்லா நிறுவனத்தின் துணைத் தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Advertisement

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்சின் சி.இ.ஓ.வாக உள்ளார். உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான எலான் மஸ்க் அவர்களின் டெஸ்லா நிறுவனத்தின் துணை தலைவராக இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீலா வெங்கடரத்னம்  அவர்கள் கடந்த 11 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இவரது வருகைக்கு பின்னரே 100 பில்லியன் வருட வருமானம் 700 மில்லியன் வருட வருமானமாக உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், டெஸ்லா நிறுவனத்தின் துணை தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன் என ஸ்ரீலா வெங்கடரத்னம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், டெஸ்லா நிறுவனத்தில் பணிபுரிவதை ஆரம்பத்தில் பெருமையாகக் கருதினேன். ஆனால் எலான் மஸ்கிடம் வேலை செய்வது இதயத்துக்கு நல்லதல்ல. மயக்கம் வரும் அளவுக்கு அங்கு மன அழுத்தம் ஏற்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார். டெஸ்லா நிறுவனத்தில் உயர் பதவியில் பணிபுரியும் இரண்டு பெண்களின் ஸ்ரீலா வெங்கடரத்னம் ஒருவர். டெஸ்லா நிறுவனத்தில் இருந்து சமீப காலமாக உயர் பதவியில் உள்ளோர் விலகி வருகின்றனர் என்பதும் ஏற்கனவே முக்கிய பதவியில் இருந்த ட்ரு பாக்லினோ என்பவர் சமீபத்தில் விலகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read more ; பாலியல் குற்றவாளி சிவராமன் மரணம்.. தற்கொலை-க்கு முன்னதாக சீமானுக்கு கடிதம்..!!

Tags :
Elon MuskteslaTesla's vice president
Advertisement
Next Article