எல்லையில் பயங்கரவாதி சுட்டுக்கொலை!. காஷ்மீரில் ஊடுருவல் முறியடிப்பு!. பாதுகாப்பு படையினர் அதிரடி!
Terrorist: ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லாவில் பயங்கரவாதிகளின் அத்துமீறி ஊடுருவலை பாதுகாப்புப் படையினர் முறியடித்தனர். அப்போது பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் உள்ள உரி செக்டாரில் பயங்கரவாதிகளின் அத்துமீறிய ஊடுருவலை பாதுகாப்புப் படையினர் முறியடித்தனர். முதற்கட்ட தகவல்களின்படி, உரி செக்டாரில் உள்ள கமல்கோட்டில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டில் பாதுகாப்பு படையினரின் ஊடுருவல் முயற்சியை பாதுகாப்பு படையினர் முறியடித்தனர். மேலும் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இந்த நடவடிக்கையில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு முதல் முறையாக பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சி மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இந்த நடவடிக்கையின் போது, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக ஊடுருவ முயன்ற பல பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் கொன்றுள்ளனர். கடந்த ஜூன் மாதத்திலும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரி செக்டாரில் உள்ள கோஹ்லான் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே எல்லை தாண்டி ஊடுருவ முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள் மீது கடுமையாக துப்பாக்கிச் சூடு நடத்தியதால், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கிச்சூடு நீடித்தது, இதில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரியாசி, கதுவா, தோடா, உரி ஆகிய பகுதிகளில் இருந்து பெரும்பாலான பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிக்கின்றனர். இதனால் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
Readmore: உஷார்!. உப்பின் காரணமாக ஆண்டுக்கு 18 லட்சம் பேர் உயிரிழப்பு!. உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்!