முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பெரும் பதற்றம்..! பதுங்கியிருந்து ராணுவ வாகனம் மீது தாக்குதல்..! 5 ராணுவ வீரர்கள் பலி, 2 பேரின் உடல்கள் சிதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுப்பு..!

08:24 AM Dec 22, 2023 IST | 1newsnationuser3
Advertisement

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டம் தனமண்டி பகுதியில் ராணுவ வீரர்கள் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, தனமண்டி - சூரன்கோட் சாலை சவ்னி பகுதியில் உள்ள ரஜோரி செக்டாரில் இரண்டு ராணுவ வாகனங்கள் மீது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் பலியாகினர். 3 வீரர்கள் காயமடைந்துள்ளனர். பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இந்திய ராணுவ வீரர்களும் உடனடியாக பதிலடி கொடுத்தனர். நேற்று மாலை முதல் அப்பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிரான கூட்டு நடவடிக்கையை ராணுவத்தினர் வலுப்படுத்தி உள்ளனர்.

Advertisement

இரண்டு வாகனங்கள், ஒரு ஜிப்சி மற்றும் ஒரு மினி டிரக், சூரன்கோட்டில் உள்ள புஃப்லியாஸில் இருந்து ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பிரிவு அமைந்துள்ள ரஜோரியில் உள்ள தனமண்டிக்கு சென்று கொண்டிருந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த வாகனங்கள் டோபா பிர்க் பகுதிக்கு கீழே சென்றபோது, ஏற்கனவே, அங்கே பதுங்கியிருந்த தீவிரவாதிகள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் சுற்றிவளைக்கப்பட்டு வியாழக்கிழமை இரவு வரை தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்தன. இந்த நடவடிக்கைக்காக சிறப்புப் படைகளின் குழு ஒன்று சேர்க்கப்பட்டுள்ளதாகவும் ஹெரான் யு.ஏ.வி-கள் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், கொல்லப்பட்ட வீரர்களில் இருவரின் உடல்கள் சிதைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாக அதிகாரிகள் கூறியதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. 48 ராஷ்டிரிய ரைபிள்ஸ் பகுதியில் இந்த நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் ​​மாவட்டத்தில் உள்ள ஆயுதமேந்திய போலீஸ் பிரிவு வளாகத்தில் நேற்று, வெடிவிபத்து நடந்ததை அடுத்து இந்த சம்பவம் நடந்துள்ளது. சூரன்கோட் பகுதியில் டிசம்பர் 19 மற்றும் 20 ஆம் தேதி இடைப்பட்ட இரவில் ஏற்பட்ட வெடிவிபத்தில் வளாகத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்களின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
5 soldiers killed5 ராணுவ வீரர் பலிTerrorists attackஇந்திய ராணுவமும் பதிலடிதீவிரவாதிகள் தாக்குதல்ஜம்மு காஷ்மீர்
Advertisement
Next Article