For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நள்ளிரவில் பயங்கரம்!. தீவிபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் பலி!. உ.பி.யில் சோகம்!

Terror in the middle of the night! 10 children died in the fire! Tragedy in UP!
05:57 AM Nov 16, 2024 IST | Kokila
நள்ளிரவில் பயங்கரம்   தீவிபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் பலி   உ பி யில் சோகம்
Advertisement

Fire: உத்தர பிரதேச மாநிலத்தில் அரசு மருத்துவமனை குழந்தைகள் வார்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 குழந்தைகள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் ஜான்சி லக்ஷமிபாய் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் குழந்தைகள் வார்டில் இன்று (நவ. 16) இரவு 12 மணியளவில் திடீரென தீ விபத்து சம்பவம் ஏற்பட்டது. தீ மளமள மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இச்சம்பவத்தில் பலர் தீயில் கருகி 10 குழந்தைகள் பலியாகியிருக்கலாம் என கூறப்படுகிறது.

தகவலறிந்த தீயணைப்பு படையினர், ஏராளமான வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்க போராடிவருகின்றனர். மின்கசிவு தீ விபத்திற்கு காரணம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர், சுகதாரத்துறை செயலர் ஆகியோரை சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணி மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். குழந்தைகள் பலியானது தமக்கு வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.

Readmore: குளிர் காலத்தில் வெந்நீரில் தலைக்கு குளிக்கிறீங்களா..? உங்கள் முடிக்கு நீங்கள் தான் எதிரி.. மருத்துவர்கள் எச்சரிக்கை!!

Tags :
Advertisement