பயங்கரம்!... பைக்கில் சென்ற மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு!… 40 பேர் பலி!… பதறிய மக்கள்!
Nigeria: நைஜீரியாவில் ஒரு சுரங்க சமூகத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 42 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவில் இனக் கலவரங்கள், மத மோதல்கள், அரசியல் கிளர்ச்சிகள், கால்நடை மேய்ச்சலில் ஈடுபடுவோருக்கும் - விவசாயிகளுக்கும் இடையேயான மோதல்கள், கொள்ளைக்காரர்களின் தாக்குதல்கள் என பல இன்னல்களுக்குப் பெயர் போன பிரதேசமாக இருக்கிறது. அந்தவகையில் வடமத்திய நைஜீரியாவின் பீடபூமி மாநிலத்தில் உள்ள Wase மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை பயங்கர துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியது. ஆயுதங்களுடன் பைக்கில் சென்ற மர்மநபர்கள் ஜுராக் சமூகத்தின் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தி வீடுகளை எரித்தனர். இந்த சரமாரி தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டதாக பீடபூமி மாநில ஆணையர் மூசா இப்ராஹிம் அஷோம்ஸ் கூறினார்.
இதேபோல், முன்னதாக கடந்த ஜனவரியில், பீடபூமியின் மங்கு நகரில் இருபிரிவினரிடையே மோதல்கள் ஏற்பட்டன. தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் எரிக்கப்பட்டன, 50 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனோ!! இந்தியாவில் ஒரே நாளில் 324 பேர் பாதிப்பு!!