பயங்கர நிலச்சரிவு!… பலி எண்ணிக்கை 300 ஆக உயரும் அச்சம்!… பாறைகளால் மீட்பு பணியில் சவால்!
papua new guinea landslide: பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், மேலும் 300க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கக்கூடும் என்று அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
பப்புவா நியூ கினியாவின் தலைநகர் போர்ட் மோர்ஸ்பிக்கு வடமேற்கே சுமார் 600 கிமீ (370 மைல்) தொலைவில் உள்ள எங்க மாகாணத்தில் உள்ள காகலம் கிராமத்தில் நேற்று அதிகாலை 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. சுமார் 100க்கும் மேற்பட்டோர் பலியானதாக ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கழகம் (ஏபிசி) தெரிவித்துள்ளது. இருப்பினும், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 300 இருக்கும் என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
ராட்சத இயந்திரங்கள் மூலம் மீட்பு பணியில் ஈடுப்பட்டு வரும் மீட்பு குழுவினர், நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தின் பரப்பளவு அதிகமாக இருப்பதாகவும், பாறைகள் நிறைந்து காணப்படுவதால் மீட்பு பணியில் சவால் நீடிப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து, நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அந்நாட்டின் பிரதமர் மராபே, "நாங்கள் பேரிடர் அதிகாரிகள், PNG பாதுகாப்புப் படை, மற்றும் பணிகள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை, நிவாரணப் பணிகளைத் தொடங்கவும், உடல்களை மீட்டெடுக்கவும், உள்கட்டமைப்பை சீரமைக்க தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
Readmore: பாய்வதற்கான நேரம் இது!… புதிய அணியை தொடங்க திட்டம்!… மவுனம் கலைத்த தல தோனி!