முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நள்ளிரவில் பயங்கரம்!… தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!... 2 பேர் காயம்!

05:43 AM May 19, 2024 IST | Kokila
Advertisement

Terrorist Attack: ஜம்மு - காஷ்மீர் அனந்த்நாக் மற்றும் ஷோபியான் ஆகிய மாவட்டங்களில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் படுகாயமடைந்தனர்.

Advertisement

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில்யான்னர் என்ற இடத்தில் உள்ள திறந்தவெளி சுற்றுலா முகாம் மீது சனிக்கிழமை (நேற்று இரவு) பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரண்டு பொதுமக்கள் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்கள் ஃபர்ஹா மற்றும் அவரது மனைவி தப்ரேஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருவரும் ராஜஸ்தானின் ஜபியூரில் வசிப்பவர்கள். தகவலறிந்து விரைந்த பாதுகாப்புப் படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து, காயமடைந்த தம்பதியினரை மீட்டு மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதேபோல் ஷோபியான் மாவட்டம் நேற்று இரவு 10.30 மணி அளவில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். பாரமுல்லாவில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு முன்னதாக இந்த தாக்குதல் நடந்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாரமுல்லாவில் ஐந்தாவது கட்டமாக நாளை ( மே 20-ம் தேதி) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஸ்ரீநகரில் வரலாறு காணாத வாக்குப்பதிவைத் தொடர்ந்து, பாரமுல்லா மற்றும் வடக்கு காஷ்மீரில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Readmore: தேர்தல் ஆணையத்திற்கு வந்த 4.24 லட்சத்துக்கும் மேற்பட்ட புகார்கள்…!

Advertisement
Next Article