கேரளாவில் பயங்கரம்!. கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் பெரும் தீவிபத்து!. 150க்கும் மேற்பட்டோர் காயம்!. 8 பேர் கவலைக்கிடம்!
Kerala: காசர்கோடு நீலேஸ்வரத்தில் உள்ள கோவில் திருவிழாவின்போது பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்ததில் 154 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 8 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
கேரள மாநிலம் காசர்கோடு நீலேஸ்வரம் அஞ்சுதம்பலம் வீரர்காவு கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழாவின் ஒருபகுதியாக காளியாட்டு விழாவின்போது நள்ளிரவில் வான வேடிக்கைகள் நடத்தப்பட்டன. அப்போது கோவிலில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்ததாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. சேமிப்புக் கிடங்கு அருகே பட்டாசுகள் வெடித்ததில் ஏற்பட்ட தீப்பொறியே வெடிப்புக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த தீவிபத்தில் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 8 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறைத் தலைவர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாக உயர் அதிகாரிகள் காயமடைந்தவர்களை மீட்டு காசர்கோடு, கண்ணூர் மற்றும் மங்களூருவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனர்.
Readmore: வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!. நவம்பர் மாதம் 13 நாட்கள் வங்கி விடுமுறை!. முழு விவரம் இதோ!