நியூ மெக்சிகோவில் பயங்கர காட்டுத் தீ.. அவசரநிலை பிரகடம் செய்த ஆளுநர்!! - 2 பேர் பலி
நியூ மெக்சிகோவில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயால், 1,400-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்கள் நாசமாகியுள்ளன. மேலும் இருவர் பரிதாபமாக தீயில் கருகி பலியாகினர். ரூய்டோசோவின் மலைப்பகுதியில் ஏற்பட்ட தீயால் 23,000 ஏக்கருக்கு மேல் தீயால் கருகியுள்ளது. 8,000 குடியிருப்பாளர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் லிங்கன் கவுண்டி, மெஸ்கலேரோ அப்பாச்சி ஆகிய பகுதிகளில் அவசர நிலையை ஆளுநர் மிச்செல் லுஜன் க்ரிஷாம் நேற்று வெளியிட்டார். அத்துடன் சவுத் ஃபோர்க் ஃபயர் மற்றும் சால்ட் ஃபயர் ஆகியவற்றிற்கு எதிராக போராட கூடுதல் நிதி மற்றும் ஆதாரங்களை விடுவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
காட்டுத் தீயை அணைக்க விமான டேங்கர்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் மற்றும் ரிடார்டன்ட்களை வீசி வருகின்றனர். இதுவரை 528-க்கும் மேற்பட்டோர் அவசரகால முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு உணவு மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.
Read more ; The GOAT படத்தின் கதை இதுதானா? இணையத்தில் லீக் ஆன ஸ்டோரி!! உண்மை சம்பவத்தை படமாக எடுக்கும் வெங்கட் பிரபு..