For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அதிபயங்கர நிலநடுக்கம் எதிரொலி!… ஜப்பானை தொடர்ந்து தென் கொரியா, தஜிகிஸ்தானிலும் நிலநடுக்கம்!

06:09 AM Jan 02, 2024 IST | 1newsnationuser3
அதிபயங்கர நிலநடுக்கம் எதிரொலி … ஜப்பானை தொடர்ந்து தென் கொரியா  தஜிகிஸ்தானிலும் நிலநடுக்கம்
Advertisement

ஜப்பானை அதிரவைத்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து தென்கொரியா, தஜிகிஸ்தான், ரஷ்யாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

Advertisement

2024 புத்தாண்டின் தொடக்கத்திலேயே ஜப்பானை பேராபத்து தாக்கியுள்ளது. ஜப்பானில் அடுத்தடுத்து பதிவான நிலநடுக்கத்தால் 10 அடி வரை சுனாமி அலை தாக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஹொக்கைடோவில் இருந்து கியூஷூ பகுதி வரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வடகொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. 2.08 மீட்டர் வரை அலைகள் கரையை அடையலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ஜப்பானில் பதிவான நிலநடுக்கங்களின் தாக்கமாக தென் கொரியாவிலும் ஒரு சில பகுதிகளில் சிறியளவில் சுனாமி ஏற்பட்டுள்ளது. மத்திய ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ரஷியாவின் போஸ்னியா- ஹெர்சகோவினா பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.8ஆக பதிவாகியுள்ளது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சாகலின் தீவின் மேற்கு கடற்கரையில் உள்ள மக்களை வெளியேற்ற ரஷிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதேபோல், தஜிகிஸ்தானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 150 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டேர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம், சுனாமி அலைகள் தாக்கியதைத் தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ள இடங்களுளில் இருந்து மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.

Tags :
Advertisement