அதிகாலையில் பயங்கரம்!. தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு!. ஜம்முவில் ராணுவ படை குவிப்பு!
Terrorists: ஜம்மு காஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் அதிகாலையில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதையடுத்து, ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ள பதற்றம் நிலவிவருகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தின் குண்டா பகுதியில் உள்ள ராணுவ தளம் மீது அதிகாலை 4 மணியளவில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளன. இதற்கு, பாதுகாப்புப் படையினரும் தகுந்த பதிலடி கொடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிது நேர துப்பாக்கிச் சண்டையை அடுத்து, பாதுகாப்புப் படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து, தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் தொடர் பயங்கரவாத தாக்குதல்களுக்கு மத்தியில், பாதுகாப்பை பலப்படுத்தவும், மேலும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும் இந்திய ராணுவம் ஜம்மு பகுதியில் ராணுவ வீரர்களை அதிகப்படுத்தியுள்ளது. கதுவா, சம்பா, கதுவா உள்ளிட்ட தோடா, பதர்வா, கிஷ்த்வார் ஆகிய இடங்களில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மேற்குக் கட்டளைப் படையில் இருந்து மேலும் பல படையினர் அனுப்பப்பட்டுள்ளனர்.
சீனப் போருக்குப் பிறகு (ஏப்ரல் 2020) பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக, இப்பகுதியில் துருப்புக்களில் இவ்வளவு பெரிய மாற்றம் ஏற்படுவது இதுவே முதல் முறை. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஒன்றரை மாதங்களில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்து, ஏராளமான பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். ஜூன் 9 அன்று ரியாசியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 9 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பின்னர் நடந்த தோடா மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் 5 வீரர்கள் வீரமரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: அதிர்ச்சி!. சிகிச்சைக்கு சென்ற இளம்பெண் திடீர் மரணம்!. தவறான ஊசி போடப்பட்டதால் விபரீதம்!