இன்றுடன் பதவிக்காலம் முடிந்தது..!! அடுத்த ஆளுநர் யார்..? முதல்வர் முக.ஸ்டாலின் சொன்ன பதிலை கவனிச்சீங்களா..?
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக யார் வருவார் என்ற கேள்விக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் இன்றுடன் (ஜூலை 31) நிறைவடைய உள்ள நிலையில், இதுவரை புதிய கவர்னர் யார் என்பது குறித்தோ, தற்போதைய ஆளுநரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா என்பது குறித்தும் எந்தவொரு அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. தற்போதைய ஆளுநருக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் இடையே ஏழாம் பொருத்தமாக இருப்பதால், புதிய ஆளுநராக யார் வருவார் என எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதுபற்றி முதல்வர் முக.ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ”நான் ஜனாதிபதியோ, பிரதமரோ இல்லை” என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ”வயநாடு நிலச்சரிவு தொடர்பாக கேரள முதல்வரிடம் பேசியிருக்கிறேன். கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படுகிறது. வயநாட்டிற்கு தமிழகத்தில் இருந்து மருத்துவக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
வயநாடு நிலச்சரிவு தொடர்பான 'சேதாரத்தை இன்னும் கணக்கெடுக்க முடியவில்லை என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளர். வயநாடு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது' என்றார். கேரளாவுக்கு தேவையான எந்த உதவிகளும் தமிழ்நாடு அரசின் சார்பாக செய்கிறோம் என்று பினராயி விஜயனிடம் நான் உறுதியளித்துள்ளேன். நிவாரண நிதியாக ரூ.5 கோடி கேரளாவுக்கு வழங்கப்பட்டது. தேவைப்பட்டால் இன்னும் உதவிகள் செய்கிறோம் என்று சொல்லியிருக்கிறோம்' என்றார்.