செங்கடலில் மீண்டும் பதற்றம்!… பனாமா எண்ணை கப்பல் மீது தாக்குதல்!… இந்திய கடற்படை பதிலடி!
Indian Navy: 22 இந்தியர்கள் உட்பட 30 பணியாளர்களுடன் பனாமா நாட்டின் கொடியுடன் கூடிய கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல் ஹவுதி தீவிரவாதிகளின் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானதை அடுத்து, இந்திய கடற்படைடின் ஐஎன்எஸ் கப்பல் தக்க பதிலடி கொடுத்து உதவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக் காலங்களில் மேற்கு இந்தியப் பெருங்கடலில் அதிகரித்துவரும் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கு இந்தியக் கடற்படை உதவிகளை செய்துவருகிறது. அந்தவகையில், ஏப்ரல் 26 ஆம் தேதி MV ஆண்ட்ரோமெடா ஸ்டார் என்ற கப்பல் செங்கடல் பகுதியில் ஹவுதி தீவிரவாதிகளின் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானது. அதாவது, ஆண்ட்ரோமெடா ஸ்டார் என்றபெயருடைய இந்தக் கப்பல் ரஷ்யாவின் பிரிமோர்ஸ்க் பகுதியிலிருந்து புறப்பட்டுள்ளது. செங்கடல் பகுதியில் இந்த எண்ணெய்க் கப்பல் வந்தபோது தாக்குதல் நடத்தியதாக ஏமனின் ஹவுதி படையினர் தெரிவித்துள்ளனர்.
கடற்படை கூற்றுப்படி, தாக்குதல் சம்பவம் குறித்து தகவலறிந்த இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் கப்பல், இரவு 10.30 மணியளவில் சம்பவ இடத்திற்கு சென்று தக்க சமயத்தில் உதவி புரிந்தது. மேலும், தாக்குதலுக்குள்ளான கப்பலில் இருந்து 22 இந்தியர்கள் உட்பட 30 பணியாளர்களும் பாதுகாப்பாக இந்திய கடற்படை மீட்டுள்ளது. மேலும், கப்பலில் மோசமான சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனாமா கொடியுடன் வந்துகொண்டிருந்த இந்தக் கப்பல் பிரிட்டன் நாட்டுக்குச் சொந்தமானது என்று ஹவுதி செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சாரியா தெரிவித்துள்ளார். ஆனால் அண்மையில்தான் இந்த கப்பலை பிரிட்டன் விற்பனை செய்ததாகவும், தற்போது அதன் உரிமையாளர் சீஷெல்ஸில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த எண்ணெய்க் கப்பல் இப்போது ரஷ்யாவுடன் தொடர்புடைய வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. ஹூதி போராளிகளால் செங்கடலில் பல்வேறு வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து உலகளாவிய கவலைகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த புதிய சம்பவம் நடந்துள்ளது.
முன்னதாக, கடந்த மார்ச் மாதம், அரபிக்கடலில் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட வணிகக் கப்பலில் இருந்து 7 பல்கேரியர்கள் 17 பணியாளர்களை இந்திய கடற்படை மீட்டது. இதேபோல், மார்ச் 4, திங்கட்கிழமை, ஏடன் வளைகுடாவில் லைபீரியக் கொடியுடன் வணிகக் கப்பல் மீது ட்ரோன் தாக்குதலுக்கு இந்திய கடற்படை விரைவாக பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.
Readmore: 14 பேர் அதிரடி கைது… குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான 86 கிலோ போதைப்பொருள்…!