"கோவிலில், பூசாரி செய்யும் காரியமா இது?"; சாமி கும்பிட கோவிலுக்கு சென்ற சிறுவனுக்கு நேர்ந்த சோகம்..
கோவை காட்டூர் தொட்டராயர் பெருமாள் கோவில் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலில் ரமேஷ் என்பவர் பூசாரியாக உள்ளார். இவர் இந்த கோவிலில் மட்டும் இல்லாமல், கோவையில் உள்ள பல கோவில்களில் பூஜை செய்து வருகிறார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் கண்ணப் நகர் பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் பெரிய கோவிலுக்கு பூஜை செய்ய சென்றுள்ளார். அப்போது அந்த கோவிலுக்கு வந்த சிறுவன் ஒருவனுக்கு, கோவிலில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ளவர்களுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர்கள் காவல் துறை மற்றும் குழந்தைகள் நலத் துறையினரிடம் தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கோவில் கமிட்டியினர் கூடி பேசி, ரமேஷை பூஜை செய்ய வர வேண்டாம் என தெரிவித்து உள்ளனர். இதனை அடுத்து, இது குறித்து தகவல் அறிந்த இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் காட்டூர் தொட்டராயர் பெருமாள் கோவில் பணி செய்து வந்த பூசாரி ரமேஷ் என்பவரை, தற்காலிக பணியிட நீக்கம் செய்துள்ளனர். பெண் பிள்ளைகளை வெளியே அழைத்து செல்ல பயந்த காலம் போய், தற்போது ஆண் பிள்ளைகளையும் வெளியே அழைத்து செல்ல பயமாக உள்ளது என்று பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர்.
Read more: வாடகை வீட்டில் இருந்தவர் கொலை; கள்ளக்காதலிக்காக ஹவுஸ் ஓனர் செய்த கொடூர சம்பவங்கள்..