For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

AI தொழில்நுட்பத்தால் ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பும் டெக் நிறுவனங்கள்..!! ஜனவரியில் மட்டும் 7,500 பேர்..!!

04:57 PM Jan 18, 2024 IST | 1newsnationuser6
ai தொழில்நுட்பத்தால் ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பும் டெக் நிறுவனங்கள்     ஜனவரியில் மட்டும் 7 500 பேர்
Advertisement

இந்தாண்டு ஜனவரி மாதத்தின் முதல் பாதியில் மட்டும் 7,500 ஊழியர்களின் பணிகளை, கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட டெக் நிறுவனங்கள் பறித்துள்ளன.

Advertisement

கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட உலகின் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள், மாபெரும் பணிநீக்கத்துடன் இந்த ஆண்டினை தொடங்கியுள்ளன. ஜனவரி மாதத்தின் முதல் பாதியில் மட்டும் இதுவரை 7,500 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளன. இதில், கூகுள் நிறுவனம் முதலிடம் வகிக்கிறது. இந்த பணி நீக்கங்களின் பின்னணியில், செலவினத்தை குறைப்பது, அதனை செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆய்வில் சேர்ப்பது உள்ளிட்ட காரணங்களை கூகுள் சுட்டிக்காட்டுகிறது.

செயற்கை நுண்ணறிவு தலையீடுகளால் மனித உழைப்புக்கு அவசியமின்றி போவதே, டெக் உலகின் பணிநீக்க நடைமுறைகளுக்கு காரணமாகின்றன. கடந்தாண்டும் டெக் நிறுவனங்களின் மத்தியில் பணிநீக்க அஸ்திரத்தை கூகுள் நிறுவனமே முதலில் ஏவியது. 2023 ஜனவரியில், கூகுளின் தாய் நிறுவனமான ‘ஆல்பாபெட்’ அதன் உலகளாவிய பணியாளர்களில் 12,000 பேரை வேலையை விட்டு அனுப்பும் கடினமான முடிவை எடுத்தது.

2023 செப்டம்பர் நிலவரப்படி உலகளவில் 1,82,381 பணியாளர்களைக் கொண்டுள்ள, கூகுளின் வரலாற்றில் இதுவே மிகப்பெரிய பணிநீக்கமாகும். ஆனால் இந்த பணிநீக்க நடைமுறைகள் நிறுவனத்திற்கு அத்தியாவசியமானது என்று அதன் சிஇஓ சுந்தர் பிச்சை விளக்கம் தெரிவித்திருந்தார். கூகுள் மற்றும் அமேசான் போன்ற பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்த ஜனவரியின் முதல் இரு வாரங்களில் மட்டும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன. மேலும், அடுத்த சில மாதங்களில் ஏஐ வரவு காரணமாக கூடுதல் பணியிடங்களை குறைக்கப்போவதாகவும் அறிவித்துள்ளன.

Tags :
Advertisement