பள்ளி மாணவிகளிடம் அத்துமீறும் ஆசிரியர்கள்..!! இனி நடவடிக்கை வேற மாதிரி இருக்கும்..!! வெளியான பரபரப்பு உத்தரவு..!!
பள்ளிகளில் மாணவிகளிடம் ஒழுக்கமின்றி நடந்து கொள்ளும் ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிசாமி, அனைத்து தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில், “பள்ளி தாளாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு போக்சோ சட்டம், SSAC அமைப்பு மற்றும் பள்ளிகளில் கல்விசார் / கல்வி இணை நிகழ்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.
அதாவது, பள்ளி மாணவிகளிடம் ஒழுக்கக்கேடான முறையில் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், தண்டனை வழங்குதல், கட்டாய பணி ஓய்வு, பணி நீக்கம் மற்றும் அவர்களின் கல்விச் சான்றுகளை ரத்து செய்ய பரிந்துரைத்தல் போன்ற நடவடிக்கைகளும் எடுக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பாலியல் வன்முறையில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுதல் தொடர்பாக வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு, அனைத்து பள்ளிகளிலும் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்டக்கல்வி அலுவலர்கள் அனுப்பப்பட்டு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : ஃபெங்கால் புயல் எப்போது எந்த இடத்தில் கரையை கடக்கிறது தெரியுமா..? பாதிப்பு எப்படி இருக்கும்..?