For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அதிரடி...! ஆசிரியர்களை இனி இந்த பணிக்கு பயன்படுத்த கூடாது...!

Teachers should no longer be used for this task
06:05 AM Aug 25, 2024 IST | Vignesh
அதிரடி     ஆசிரியர்களை இனி இந்த பணிக்கு பயன்படுத்த கூடாது
Advertisement

எமிஸ் பணியினை ஆசிரியரல்லாத பணியாளர்களைக் கொண்டு மட்டுமே முடிக்க வேண்டும்.

இது குறித்து பள்ளி கல்வித்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; முதன்மைக் கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை) மற்றும் நேர்முக உதவியாளர் (இடைநிலை) இணையவழிக் கூட்டம் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் நேர்முக உதவியாளர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

Advertisement

அதன்படி, தமிழகத்தில் அரசு, அரசு நிதி உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அனைத்து குறை, நிறைகளை தலைமை ஆசிரியர்களுடன் கலந்து ஆலோசித்து தேவையான விவரங்களை முதன்மைக் கல்வி அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும். முக்கியமாக கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு (எமிஸ்) இணையதளத்தில் பதிவேற்றும் பணிகளை ஆசிரியர்கள் செய்யும்போதுகற்றல் - கற்பித்தல் பணிகளுக்குபெரும் இடையூறு ஏற்படுவதாகதெரியவருகிறது. எனவே, ஆசிரிய ரல்லாத பணியாளர்களுக்கு பயிற்சி அளித்து எமிஸ் பணிகளை பணியாளர்களை கொண்டு மட்டுமே மேற்கொள்ள வேண்டும். 2023-24 மற்றும் 2024-25 கல்வியாண்டுக்கு நலத்திட்டங்கள் பெற்று வழங்கிய விவரம் அவ்வப்போது எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என பலமுறை அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

அதேநேரம் இதுவரை 100 சதவீதம் முழுமையாக விவரங்கள் பதிவேற்றம் செய்யவில்லை. இதனால் அரசு செயலரின் கூட்டத்துக்கு முழுமையான சரியான அறிக்கையினை சமர்ப்பிக்க இயலாத நிலை ஏற்படுகிறது. எனவே நேர்முக உதவியாளர்கள் இதில் சிறப்பு கவனம் செலுத்தி நலத்திட்டங்கள் வழங்கியவுடன் எமிஸ் தளத்தில் முழுமையாக பதிவேற்றம் செய்யப்பட்டதை உறுதிசெய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement