அதிர்ச்சி!!! பள்ளி வளாகத்தில், மாணவனுடன் உல்லாசமாக இருந்த ஆசிரியை..
மகாராஷ்டிரா மாநிலம், புனே, கஞ்ச்பெத் பகுதியை சேர்ந்தவர் 27 வயதான வினோதினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகிறார். இந்நிலையில், இவரது வகுப்பில் 17 வயதான மாணவர் ஒருவர் பயின்று வருகிறார். இந்நிலையில், மாணவன் மீது ஆசிரியைக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வினோதினி மாணவனுடன் நெருக்கமாக பழகி அவருடன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில், ஆசிரியை பள்ளியின் வளாகத்திலேயே மாணவனுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த மாணவன் தனது வீட்டில் சோகமாக இருந்துள்ளான். இத்தனை கவனித்த மாணவனின் பெற்றோர் தங்களின் மகனிடம் விசாரித்துள்ளனர். அப்போது மாணவன் தனக்கு நடந்ததை எல்லா கூறி அழுதுள்ளான். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவனின் பெற்றோர், சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் போக்ஸோ சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ஆசிரியையிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் மாணவனுடன் உல்லாசமாக இருந்தது உறுதியானது. இதையடுத்து, போலீசார் ஆசிரியை வினோதினியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.. பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர் மட்டும் இன்றி, ஆண் பிள்ளைகளை பெற்ற பெற்றோரும் இன்று தங்களின் பிள்ளைகளை அனுப்பி விட்டு பயத்தில் இருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
Read more: “யாருகூட டா போன் பேசுற” தனியாக சென்று செல்போன் பேசிய கணவர்; ஆத்திரத்தில் மனைவி செய்த கொடூர செயல்..