For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

டாட்டூக்களை உடனடியாக அகற்ற வேண்டும்!… இல்லையென்றால் கடும் நடவடிக்கை!… காவல்துறை அதிரடி!

04:58 AM Apr 11, 2024 IST | Kokila
டாட்டூக்களை உடனடியாக அகற்ற வேண்டும் … இல்லையென்றால் கடும் நடவடிக்கை … காவல்துறை அதிரடி
Advertisement

Tattoo: கண்ணியத்தை இழிவுபடுத்தும் வகையில் உடலில் வரையப்பட்டுள்ள டாட்டூக்களை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என்று ஒடிசாவின் சிறப்புப் பாதுகாப்புப் பட்டாலியன் படையினருக்கு அம்மாநில காவல் துறை உத்தரவிட்டுள்ளது.

Advertisement

இதுதொடர்பாக ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் காவல்துறை துணை ஆணையர் வெளியிட்டுள்ள உத்தரவில், ஒடிசாவில் முதலமைச்சர் இல்லம், ஆளுநர் மாளிகை, மாநில தலைமைச் செயலகம், சட்டப் பேரவை, உயர் நீதிமன்றம் போன்ற முக்கிய இடங்களுக்கு எஸ்எஸ்பி பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு அளிக்கின்றனர்.

மேலும், அம்மாநிலத்தில் உள்ள விவிஐபி-க்கள், உயர் அதிகாரிகள், இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்து ஒடிசாவுக்கு வரும் முக்கியஸ்தர்களுக்கும் எஸ்எஸ்பி படையினர் தான் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் சீருடை அணிந்திருக்கும்போது, பிறரால் எளிதில் கவனிக்கப்படும் வகையில் உடலில் உள்ள டாட்டூக்களை அகற்ற உத்தரவிட்டுள்ளது.

இது ஒடிசா காவல்துறையின் கண்ணியத்தை இழிவுபடுத்துகிறது. இயற்கையில் இச்செயலானது அசிங்கமானது மற்றும் இழிவானது. எனவே, தீவிர பரிசீலனைக்குப் பின்னர், இன்று முதல், சீருடை அணிந்திருக்கும் போது தெரியும் டாட்டூக்களுக்கு அனுமதி இல்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில் எஸ்எஸ்பி பாதுகாப்பு படையினர் 15 நாட்களுக்குள் டாட்டூவை அகற்றவேண்டும் என்றும் இதனை பின்பற்றாதவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' எஸ்எஸ்பி படையினரின் தலைமை அதிகாரிகள், தங்கள் கீழ் உள்ள பணியாளர்கள் சீருடை அணிந்திருக்கும்போது எளிதில் கவனிக்கக்கூடிய வகையில் உடல் பாகங்களில் டாட்டூக்கள் வரைந்திருப்பவர்கள் குறித்த பட்டியலை தயாரிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Readmore: மகிழ்ச்சி…! ஏப்ரல் 19-ஆம் தேதி அனைத்து திரையரங்கு ஊழியர்களுக்கும் விடுமுறை…!

Advertisement