For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கீமோதெரபிக்கு குட் பாய்.!மாற்று மருந்து கண்டுபிடித்து இந்திய விஞ்ஞானிகள் சாதனை .! புற்று நோய் குழந்தைகளுக்கு ஹேப்பி நியூஸ்.!

09:16 PM Dec 31, 2023 IST | 1newsnationuser4
கீமோதெரபிக்கு குட் பாய்  மாற்று மருந்து கண்டுபிடித்து இந்திய விஞ்ஞானிகள் சாதனை    புற்று நோய் குழந்தைகளுக்கு ஹேப்பி நியூஸ்
Advertisement

இந்தியாவில் கீமோதெரபிக்கான மருந்து முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் நிகழ்வு மருத்துவ துறையில் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டிற்கு பத்தாயிரம் குழந்தைகள் பயனடைவார்கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீமோதெரபி முறையில் மருத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் பல பக்க விளைவுகள் ஏற்படுவதோடு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் நோயாளிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் கீமோதெரபிக்கு பதிலாக வாய் வழியாக எடுத்துக் கொள்ளும் மருந்தை பெங்களூரைச் சேர்ந்த டாடா மெமோரியல் சென்டர் மற்றும் ஐடிஆர்எஸ் லேப்ஸ் ஆகியவை இணைந்து உருவாக்கியிருக்கிறது.

மேலும் இந்த மருந்து இந்தியாவில் முதல்முறையாக கிமோ தெரபிக்கு பதிலாக கண்டுபிடிக்கப்பட்ட மருந்து என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மருந்து வாய் வழியாக எடுத்துக் கொள்ளும் வகையில் பவுடர் வடிவில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. கீமோதெரபிக்கு பதிலாக இந்தியாவில் இருக்கும் ஒரே மருந்து இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எம்பி மெர்க்காப்டப்புரின் என்ற மருந்து பயன்பாட்டில் இருக்கிறது என்றாலும் இது மற்ற நாடுகளில் பயன்படுத்த அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில் பெங்களூரைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் நிணநீர் புற்று நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக மெர்கேப்டோப்யூரின் என்ற மருந்தை உருவாக்கியுள்ளனர். இந்த மருந்தின் பயன்பாட்டால் புற்று நோயால் பாதிக்கப்பட்ட பத்தாயிரம் குழந்தைகள் ஒரு வருடத்திற்கு பயன் பெறுவார்கள். மேலும் இந்த மருந்து பவுடர் வடிவில் திரவமாக உட்கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இவை குழந்தைகளின் புற்றுநோய் செல்களை தாக்கி அளிக்கும் வல்லமை கொண்டது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags :
Advertisement