For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை மிஞ்சிய டாடா குழும பங்குகள்.! ரூ.365 லட்சம் கோடியாக உயர்வு.!

11:07 AM Feb 20, 2024 IST | 1newsnationuser4
பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை மிஞ்சிய டாடா குழும பங்குகள்   ரூ 365 லட்சம் கோடியாக உயர்வு
Advertisement

இந்திய நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) இந்தியாவின் இரண்டாவது பெரிய நிறுவனம் என்ற அந்தஸ்தை மட்டுமல்லாமல், பாகிஸ்தானின் பொருளாதார அளவில் பாதியை எட்டியுள்ளது என்று கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது அதன் மதிப்பு 170 மில்லியன் டாலர்கள் என்று தெரியவந்துள்ளது.

Advertisement

பாகிஸ்தான் உடைய ஜிடிபி $341 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், டாடா குழுமத்தின் சந்தை மூலதனம் $365 பில்லியன் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஒரே வருடத்தில் அதன் கூட்டு ஸ்தாபனங்கள் ஈட்டிய வருமானத்தை கணக்கிடும் பொழுது இந்தத் தொகையை எட்டியுள்ளது.

இந்திய மதிப்பில் ரூபாய் 15 லட்சம் கோடி மதிப்புள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய நிறுவனம் என்பது மட்டுமல்லாமல், பாகிஸ்தானுடைய பொருளாதார அளவில் பாதியை எட்டி உள்ளது. பாகிஸ்தானுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) FY22இல் 6.1 சதவிகிதமும், FY21இல் 5.8 சதவிகிதமும் மற்றும் FY23இல் சுருங்கியுள்ளது எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

வெள்ளத்தினால் கடும் சேதத்தை சந்தித்த அந்த நாடு, ஜூலை மாதம் முதல் மற்ற நாடுகளில் இருந்து பெற்ற 125 பில்லியன் டாலர்கள் வரையிலான வெளிநாட்டுக் கடனுக்காக, $25 பில்லியன் கடனை செலுத்த முயல்கிறது. அதன் அன்னிய செலாவணி கையிருப்பு $8 பில்லியனாக உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) $3 பில்லியன் திட்டமும் மார்ச் மாதத்தில் முடிவடைய உள்ளது.

டாடா குழுமத்தின் சந்தை மதிப்பில், பெருமளவிலான லாபம் டாடா மோட்டர்ஸ் மற்றும் ட்ரெண்டின் மல்டி பேக்கர் ரிட்டர்ன்களிலிருந்து வந்திருக்கிறது. டாடா டெக்னாலஜிஸ் உள்ளிட்ட 8 டாடா நிறுவனங்கள் (டிஆர்ஃப், டிரெண்ட், பனாரஸ் ஹோட்டல்ஸ், டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன், டாடா மோட்டார்ஸ், ஆட்டோமொபைல் கார்ப்பரேஷன் ஆஃப் கோவா மற்றும் ஆர்ட்சான் இன்ஜினியரிங்), கடந்த ஆண்டு இரு மடங்கு செல்வத்தை பெற்றுள்ளது.

ACE ஈக்விட்டியின் தரவுகளின் படி, டாடா கெமிக்கல்ஸ் மட்டும் சென்ற வருடத்தை விட இந்த வருடம் 5 சதவிகிதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஏற்கனவே டாடா ப்ளே ஐபிஓவிற்கு செபியின் ஒப்புதலைப் பெற்றுள்ள நிலையில், காலவரிசை மட்டும் அறிவிக்கப்படாமல் உள்ளது.

டாடா சன்ஸ், டாடா கேபிடல், டாடா ப்ளே, டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் மற்றும் ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா போன்ற பட்டியலிடப்படாத டாடா நிறுவனங்களின் சந்தை மதிப்பை கணக்கிட்டால், டாடா குழுமத்தின் சந்தை மதிப்பு இன்னும் 160-170 பில்லியன் டாலர்கள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

English Summary: Tata Consultancy Services (TCS) is not just India's second-largest company but has reached roughly half the size of Pakistan's economy.

Read more: https://1newsnation.com/rape-victim-was-sexually-assaulted-by-the-judge-in-tripura-shocking-incident/

Advertisement