இனி இட்லி, தோசைக்கு சுவையான எலுமிச்சை சட்னி சாப்பிட்டுப் பார்க்கலாமே.? இதோ ஈஸி ரெஸிபி.!
இதுவரைக்கும் நாம தேங்காய் சட்னி, புதினா சட்னி, தக்காளி சட்னி, காரச் சட்னி ட்ரை பண்ணி இருப்போம். லெமன் சட்னி செஞ்சு பார்த்து இருக்கீங்களா.? சிம்பிளான மற்றும் சுவையான எலுமிச்சை சட்னி செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம்.
இதற்கு இரண்டு எலுமிச்சை பழம் ஒரு தக்காளி, வெங்காயம், சிறிதளவு காய்ந்த மிளகாய், பூண்டு பல் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். எலுமிச்சை மற்றும் தக்காளி மற்றும் வெங்காயம் ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சீரகம் மற்றும் மிளகு ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.
இதனுடன் வெங்காயம் பூண்டு காய்ந்த மிளகாய் பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றையும் போட்டு நன்றாக வதக்கவும். இவற்றுடன் வெட்டி வைத்த எலுமிச்சை மற்றும் தக்காளி பழங்களையும் போட்டு நன்றாக கிளறி விடவும். இது சிறிதளவு வெந்து வந்ததும் வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி ஆற விடவும்.
நன்றாக ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு விழுது போல அரைத்து எடுக்கவும். நன்றாக அரைத்து எடுத்ததும் சுவையான எலுமிச்சை சட்னி தயார். இது சாதம் மற்றும் இட்லி தோசை ஆகியவற்றுடன் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். கண்டிப்பா நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.