வாயில் எச்சில் ஊற வைக்கும், தித்திப்பான வாழைப்பழம் அல்வா ரெஸிபி.! வாங்க ட்ரை பண்ணுவோம்.!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அல்வா என்றால் மிகவும் பிடிக்கும். இந்த அல்வாவை உடல் நலத்திற்கு ஆரோக்கியம் தரும் வகையில் சீனி இல்லாமல் வாழைப்பழம் மற்றும் நெய் சேர்த்து எப்படி சுவையாக செய்வது என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.
இந்த சுவையான அல்வா செய்வதற்கு 4 வாழைப்பழம், 150 கிராம் வெல்லம், 1 டீஸ்பூன் ஏலக்காய் பொடி, 100 கிராம் முந்திரிப் பருப்பு, 7 ஸ்பூன் சுத்தமான நெய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில் நான்கு வாழைப்பழத்தையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும். வாழைப்பழம் நன்றாக அறைந்ததும் அதனை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும்.
இப்போது ஒரு பாத்திரத்தில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி அதில் 150 கிராம் வெல்லத்தை சேர்த்து நன்றாக காய்ச்ச வேண்டும். வெல்லம் நன்றாக உருகி பாகு பதத்தில் வந்ததும் அடுப்பை அணைத்து வெல்லப்பாகை தனியாக எடுத்து வைக்கவும். இப்போது மற்றொரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி அதில் முந்திரிப் பருப்பை வறுத்து எடுக்க வேண்டும். முந்திரிப் பருப்பு பொன்னிறத்தில் வந்ததும். அடுப்பை அணைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
இப்போது அதே பாத்திரத்தில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி அரைத்து வைத்த வாழைப்பழத்தை சேர்த்து நன்றாக கிளறவும். சிறிது நேரம் நன்றாக கிளறிய பின் வெல்லப்பாகை இதனுடன் சேர்த்து கிளற வேண்டும். இவற்றை நன்றாக கிளறிக் கொண்டு இருக்கும்போதே மேலும் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்போது ஒரு டீஸ்பூன் ஏலக்காய் பொடியை தூவி நன்றாக கிளறவும். இப்போது இந்த கலவையுடன் வறுத்து வைத்த முந்திரிப் பருப்பை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். மேலும் 1 ஸ்பூன் நெய் ஊற்றி கிளற வேண்டும். இவை அனைத்தும் நன்றாக கலந்து நல்ல பதத்தில் வந்ததும் அடுப்பை அணைத்து அல்வாவை வாழை இலைக்கு மாற்றவும். சுவை மற்றும் சத்து நிறைந்த வாழைப்பழ அல்வா ரெடி.