வாழைப்பழத்தில் பூரி சாப்பிட்டு இருக்கீங்களா.?சூப்பரான சிம்பிள் ரெஸிபி.?
வழக்கமான உணவுகளையே சாப்பிட்டு போர் அடிக்கிறதா.? வாங்க இன்னைக்கு வித்தியாசமான மற்றும் சுவையான வாழைப்பழ பூரி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
இதற்கு இரண்டு வாழைப்பழங்கள் 1/2 கப் சீனி மற்றும் 1 கப் கோதுமை மாவு எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில் வாழைப்பழத்தின் தோலை நீக்கிவிட்டு அதை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும். அதன் பிறகு 1/2 கப் சீனி மற்றும் 1 கப் கோதுமை மாவு சேர்த்து நன்றாக பிசையவும். இந்த மாவு பிசையும் போது தண்ணீர் மற்றும் எண்ணெய் சேர்க்கக்கூடாது. தேவைப்பட்டால் 2 டேபிள்ஸ்பூன் பால் சேர்த்துக் கொள்ளலாம்.
நன்றாக மாவு பிசைந்ததும் அதிலிருந்து ஒரு சிறு பகுதியை எடுத்து மாவிற்கு கீழேயும் மேலேயும் நன்றாக எண்ணெய் தடவி பூரிக்கட்டையால் நன்றாக தேய்த்து எடுக்க வேண்டும். மிகவும் மெல்லியதாக தேய்ந்து விடக்கூடாது. சற்று தடிமனாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். மாவை பரப்பி நன்றாக தேய்த்தபின் ஒரு கிளாஸ் வைத்து சம அளவில் வட்ட வடிவில் மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் வைத்த தாட்சியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் நாம் தேய்த்து வைத்த மாவை போட்டு பொரித்து எடுத்தால் சுவையான பூரி ரெடி.