டாஸ்மாக் கடைகளில் வரப்போகும் கட்டுப்பாடு..!! ஊழியர்கள் மகிழ்ச்சி..!! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!!
டாஸ்மாக் கடைகளில் நிலவும் முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று, டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் அவ்வப்போது கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், டாஸ்மாக்குகளில் புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இது தொடர்பாக தமிழக டாஸ்மாக் பணியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் தனசேகரன் கூறுகையில், "மது வாங்க வருவோர், ஒரு பாட்டில், 2 பாட்டில் என்று வாங்குவார்கள். ஆனால், மதுக்கூடங்களுக்கு மது அருந்த வருவோர், நேரடியாக மதுக்கூடத்திற்கு சென்று, அங்கு பணிபுரியும் ஊழியரிடம் மது வாங்கி வரச்சொல்லி அனுப்புகிறார்கள்.
அவர்களும் ஒரு மேஜைக்கு 2, 3, பாட்டில் வீதம், 4-5 மேஜைகளுக்கு சேர்த்து, ஒரே சமயத்தில் மொத்தமாக மது பாட்டில்களை வாங்கிச் செல்கிறார்கள். இது, மதுஅருந்த வந்தவர்களுக்கு வாங்கப்படுகிறதா? அல்லது பதுக்கி விற்க வாங்கப்படுகிறதா? என்பதெல்லாம் ஊழியர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனால், கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் விற்கும்போது, போலீசாரிடம் பிடிபட்டு விசாரணையில் கேட்டால், டாஸ்மாக் ஊழியர்களை கைகாட்டி விடுகிறார்கள். இதனால், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே, தனிநபர் ஒருவருக்கு ஒருமுறை எத்தனை பாட்டில் விற்கப்பட வேண்டும்? என்ற விதிமுறையை டாஸ்மாக் உருவாக்கி, விரைவில் வெளியிட வேண்டும்” என்று கேட்டுள்ளார்.
Read More : சவுக்கு சங்கர் மீது துடைப்பம் வீசிய வழக்கு..!! சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை..!!