மது பிரியர்களே.. டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் முக்கிய மாற்றம்.. இனி எல்லாம் டிஜிட்டல் தான்..!!
டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் டிஜிட்டல் முறையில் மது விற்பனை தொடங்க உள்ளது. அதன்படி இனி டாஸ்மாக் கடைகளில் மதுவாங்குபவர்களுக்கு ரசீது கொடுக்கப்படும்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் முறைகேடாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்கவும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட மற்ற நேரங்களில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதை தடுக்கவும், மதுபான விற்பனையை டிஜிட்டல் மூலமாக டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.294 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
முதல் கட்டமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 220 டாஸ்மாக் கடைகளில், இன்று முதல் டிஜிட்டல் முறையில் மதுபானங்களுக்கு ரசீது வழங்கப்படும். அதேபோல் QR code மூலம் பணம் செலுத்தும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. மதுபாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக ரூ.10 முதல் ரூ.40 வரை வசூலிக்கப்படுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு Bill வழங்கும் நடைமுறை, சோதனை அடிப்படையில் முதற்கட்டமாக ராணிப்பேட்டையில் உள்ள 7 கடைகளில் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.
பில்லிங் முறை : டாஸ்மாக் கடைகளின் செயல்பாடுகளை கணினிமயமாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த பில்லிங் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் உள்ள விற்பனையாளர்கள் கையடக்க ஸ்கேனர் மூலம் ஒவ்வொரு பாட்டிலிலும் உள்ள கலால் வரியுடன் கூடிய லேபிள்களை ஸ்கேன் செய்து பில் ரசீதுகளை வாடிக்கையாளரிடம் வழங்குகின்றனர். மதுபாட்டில்களை ஸ்கேன் செய்தால், அந்த பாட்டில் எங்கே வாங்கப்பட்டது, எந்த தேதியில் வாங்கப்பட்டது, இது எந்த பேட்ச்சை சேர்ந்தது, மதுபான ஆலையில் இருந்து எப்போது வெளியே கொண்டு வரப்பட்டது போன்ற பல்வேறு விவரங்களை தெரிந்து கொள்ள முடியும்.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்துக் கழகப் பணியாளர்களை நியமிப்பதில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் கடந்தாண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே, தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
செந்தில் பாலாஜியின் உடல் நிலையை கருத்தில் கொண்டும், ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருப்பதாலும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை வைந்திருந்தது. அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்பு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. சிறையில் இருந்து வெளிவந்த மூன்றே நாளில் மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.
Read more ; தமிழகத்தில் இங்கெல்லாம்தான் ஹாட்ஸ்பாட்… தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த கனமழை அலர்ட்!