For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து 3 நாட்களுக்கு இயங்காது..!! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!! மதுப்பிரியர்கள் ஷாக்..!!

08:24 AM Nov 20, 2023 IST | 1newsnationuser6
டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து 3 நாட்களுக்கு இயங்காது     மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு     மதுப்பிரியர்கள் ஷாக்
Advertisement

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விநாயகரும், சந்திரசேகரரும் திருக்கோவிலை வலம் வந்து ராஜகோபுரம் அருகே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர். பின்னர் 4 குடைகள் கூடிய தங்க சூரிய பிரபை வாகனத்தில் சந்திரசேகரரும், மூசிக வாகனத்தில் விநாயகரும் மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். வழிநெடுகிலும் திரண்டிருந்த பக்தர்கள் மாடவீதியில் வலம் வந்த விநாயகர் மற்றும் சந்திரசேகரை கண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திரு கார்த்திகை தீபம் வரும் 26ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, திருவண்ணாமலை மற்றும் வேங்கிக்கால் பகுதிகளில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு வரும் 25, 26, 27 ஆகிய தேதிகளில் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Tags :
Advertisement