Tasmac | டாஸ்மாக் கடைகளில் அதிரடி கட்டுப்பாடு..!! இனி ஒருவருக்கு எத்தனை பாட்டில் தெரியுமா..?
மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி பதுக்குவதை தடுக்க, ஒருவருக்கு எத்தனை பாட்டில் விற்கப்பட வேண்டும் என்ற விதிமுறையை வெளியிடுமாறு டாஸ்மாக் நிர்வாகத்திற்கு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம், 4,829 கடைகள் வாயிலாக மதுபான வகைகளை விற்பனை செய்கிறது. கடந்த நிதியாண்டை காட்டிலும் 2023- 24 நிதி ஆண்டில் டாஸ்மாக் மூலம் 1,734 கோடியே 54 லட்சம் ரூபாய் அதிகமாக மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயர்த்தீர்வை துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில், 45 ஆயிரத்து 855 கோடியே 67 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி பதுக்குவதை தடுக்க, ஒருவருக்கு எத்தனை பாட்டில் விற்கப்பட வேண்டும் என்ற விதிமுறையை வெளியிடுமாறு டாஸ்மாக் நிர்வாகத்திற்கு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் விற்பவர்கள் சிக்கும்போது டாஸ்மாக் ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே, இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.