TANGEDCO | மின் கம்பம், மின் சாதனங்களை இடமாற்றம் செய்வதற்கான கட்டணம் அதிரடி குறைப்பு..!! தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!
மின்கம்பம், மின் சாதனங்களை இடமாற்றம் செய்வதற்கான கட்டணத்தை டான்ஜெட்கோ குறைத்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின்கம்பம், மின் கம்பி, மின் பாதை, மின் மாற்றி மற்றும் மின் சாதனைகளை மாற்ற அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து அரசிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை பரிசீலனை செய்த அரசு, தற்போது முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதாவது பொதுமக்கள் தங்கள் நிலத்தில் இருந்து அருகில் உள்ள மின்கம்பம், மின் சாதனங்களை இடமாற்றம் செய்வதற்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும், வெளியான அறிவிப்பின் படி, மொத்த மதிப்பீட்டு தொகையில் நிர்வாகம் மற்றும் மேற்பார்வை கட்டணம் 22% லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் செலுத்த வேண்டிய மதிப்பீட்டு தொகை வெகுவாக குறைவதால் மிகவும் பயனடைவர் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.