மாணவர்களுக்கு ரூ.1,000 வழங்கும் ’தமிழ்ப்புதல்வன்’ திட்டம்..!! நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் முக.ஸ்டாலின்..!!
அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை காலை விமானம் மூலம் கோவைக்கு வருகை தருகிறார். காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் வரும் அவருக்கு, திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. பின்னர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெறும் அரசு விழாவில் முதல்வர் முக.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
அப்போது தமிழ்ப் புதல்வன் திட்டத்தை துவக்கி வைக்க உள்ளார். இத்திட்டத்தின் மூலம் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் (தமிழ் வழியில்) பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தால், லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடை உள்ளனர்.
பின்னர் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.470 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆத்துப்பாலம் - உக்கடம் மேம்பாலத்தை முதலமைச்சர் திறந்து வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார். உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி, பாலக்காடு, பேரூர், செல்வபுரம், ஆகிய ஊர்களுக்கு விரைந்து செல்லும் வகையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் திறக்கப்படுவதால் கோவை மாநகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : வீடு, வாகன கடன்களுக்கான வட்டி உயர்வு..? ரிசர்வ் வங்கி ஆளுநர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!