For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சிறையிலும் வந்தாச்சு வீடியோ கால்.! எவ்வளவு நேரம் பேசலாம்.? நிபந்தனைகள் என்ன.?

01:23 PM Dec 13, 2023 IST | 1newsnationuser4
சிறையிலும் வந்தாச்சு வீடியோ கால்   எவ்வளவு நேரம் பேசலாம்   நிபந்தனைகள் என்ன
Advertisement

சிறைச்சாலைகள் என்பவை கைதிகளுக்கு தண்டனை கொடுக்கும் இடமாக மட்டுமில்லாமல் அவர்களை பண்படுத்தும், திருத்தும் களமாகவும் செயல்பட்டு வருகிறது. சிறையில் கைதிகளுக்கு கல்வி போதிப்பதில் இருந்து பல்வேறு விதமான பணிகளும் மனிதாபிமான அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது.

Advertisement

அவர்களது வாழ்க்கை மேம்படுவதோடு அவர்கள் திருந்தி வாழ்வதற்கு ஒரு வாய்ப்பாக அமையும். இதனால் சிறை துறை கைதிகளுக்கு வழங்கும் சலுகைகளில் ஒவ்வொரு வருடமும் புதிய வரைமுறைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இதன் அடிப்படையில் தற்போது கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் தொலைபேசி பேசும் நேரத்திற்கான புதிய வரம்புகளை அறிவித்திருக்கிறது தமிழக சிறைத்துறை.

இந்த புதிய வரம்புகளின் அடிப்படையில் கைதிகள் தங்களது குடும்பத்தினருடன் பேசும் கால அளவு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு கைதிகளுக்கு தொலைபேசியில் தங்கள் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள 8 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது இந்த வசதி 10 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. மேலும் கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் வீடியோ கால் பேசும் வசதியும் 56 நிமிடங்களில் இருந்து 120 நிமிடங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கைதிகளின் மன அழுத்தம் குறையும் என சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement