'B.Ed/D.T.Ed' படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு.! ₹.12,000/- சம்பளம்.! உடனே அப்ளை பண்ணுங்க.!
மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக இயங்கி வரும் பார்வையற்றோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியர் மற்றும் விடுதி காப்பாளருக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவித்திருக்கிறது. இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி இடைநிலை ஆசிரியர் மற்றும் விடுதி காப்பாளர் பணிகளுக்கு முறையே 1 காலியிடம் இருக்கிறது.
இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க பி.எட் மற்றும் டி.டி.எட் படிப்புகளில் சிறப்பு கல்வி தேர்ந்தெடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூனியர் டீச்சர் ட்ரைனிங் படிப்பில் டிப்ளமோ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது . இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வயதுவரம்பு எதுவும் குறிப்பிடப்படவில்லை. மேலும் இந்த வேலை வாய்ப்பிற்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மதிப்பு ஊதியம் அடிப்படையில் ரூபாய்.12,000/- வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கு தேர்வு கட்டணம் எதுவும் செலுத்த வேண்டிய தேவையில்லை. தகுதியும் விருப்பமும் உடைய நபர்கள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களது விண்ணப்பத்தினை 30.01.2024 தேதிக்குள் நம்பர்:572, கே.கே நகர், மதுரை - 625020 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலை வாய்ப்பிற்கு நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பிறகு விவரங்களை அறிய tn.gov.in என்ற முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.