முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பொதுத்தேர்வுகள் 2024: வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை.!

01:35 PM Feb 08, 2024 IST | 1newsnationuser7
Advertisement

தமிழகத்தில் 10, 11, 12 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் வருகின்ற மார்ச் மாதம் முதல் நடைபெற இருக்கிறது. 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் மாதம் 1-ஆம் தேதி தொடங்கி மார்ச் 22-ல் முடிகிறது.11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் 4-ஆம் தேதி தொடங்கி 25 -ஆம் தேதி முடிவடைகிறது. 10-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மார்ச் 26-ல் தொடங்கி ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி முடிவடைய உள்ளது.

Advertisement

இந்நிலையில் பொது தேர்வுகள் தொடர்பாக பள்ளிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வகுத்திருக்கிறது. பொது தேர்வுகளின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் தேர்வுகளுக்கான கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படுவது தொடர்பான நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது.

இந்த புதிய வழிகாட்டுதல்களின் படி அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் மட்டுமே தேர்வு மையம் முதன்மை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் மையங்களின் முதன்மை கண்காணிப்பாளராக அரசு தலைமை ஆசிரியர்கள் மூத்த ஆசிரியர்கள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

மேலும் தேர்வு மைய கண்காணிப்பாளராக தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்களை நியமிக்க கூடாது என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. தேர்வு கண்காணிப்பாளராக நியமிக்கப்படுபவர்கள் தேர்வு நடைபெறும் பாடத்தின் ஆசிரியராக இருக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது . மேலும் கண்காணிப்பாளர்களை குழுக்கள் முறையில் தேர்வு செய்ய வேண்டும் எனவும் பள்ளி கல்வித்துறை தனது வழிகாட்டுதல் நெறிமுறையில் தெரிவித்திருக்கிறது.

Tags :
Guidelines 2024NotificationPublic Exams 2024school education depttn govt
Advertisement
Next Article