முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"திமுக அரசு ஸ்டாண்ட் போட்டு சைக்கிள் ஓட்டுது.." தமிழக வளர்ச்சி குறித்து அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு.!

07:24 PM Feb 04, 2024 IST | 1newsnationuser7
Advertisement

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளும் திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு எதிராக அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை பார்த்து ஆபாசமான கருத்தை கூறியதாக இவர் மீது சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் திமுக மூத்த தலைவரான அமைச்சர் துரைமுருகனை சீண்டி வருகிறார் .

Advertisement

இந்நிலையில் தமிழக அரசின் நிதி நிர்வாகம் மற்றும் ஆட்சி நிர்வாகம் குறித்து தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார் அண்ணாமலை. இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன் நிதி நிர்வாகம் பற்றி அண்ணாமலைக்கு எதுவும் தெரியாது என பதிலளித்திருந்தார். இதற்கு அண்ணாமலை தற்போது பதில் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக பேசியிருக்கும் அண்ணாமலை " தமிழக அரசின் வளர்ச்சி சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு ஓட்டுவது போன்ற உள்ளது. அமைச்சர் துரைமுருகனை விட கணக்கு நன்றாகவே தெரியும். ஜாதி மத அரசியல் செய்து ஆட்சியை ஓட்டிக் கொண்டிருக்கிறது திமுக. இதற்கு எல்லாம் பாஜக ஆட்சி தான் ஒரே தீர்வு என தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் சமீபத்திய பேட்டி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்படுத்தியது.

Tags :
annamalaiBJPDmkpoliticsTamilnadu
Advertisement
Next Article