For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அடுத்த சர்ச்சை...! ஒடிசா வளர்ச்சிக்கு மோடி அரசு கொடுத்த நிதியை தமிழ்நாட்டு ஒப்பந்ததாரர்கள் கொள்ளை...!

07:02 PM May 26, 2024 IST | Vignesh
அடுத்த சர்ச்சை     ஒடிசா வளர்ச்சிக்கு மோடி அரசு கொடுத்த நிதியை தமிழ்நாட்டு ஒப்பந்ததாரர்கள் கொள்ளை
Advertisement

ஒடிசா வளர்ச்சிக்காக மோடி அரசு கொடுக்கும் நிதியை தமிழ்நாட்டு ஒப்பந்ததாரர்கள் கொள்ளையடிக்கின்றனர் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியை பேசிய சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியுள்ளது.

Advertisement

ஒடிசாவில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாக புரி ஜெகநாதர் ஆலயத்தில் உள்ளது. அங்கு நகைகள் உள்ளிட்டவைகளை வைக்கும் அறையின் சாவியானது காணாமல் போனதாக கூறப்படுகிறது. இந்த அறையை கடைசியாக 1985 ஆம் ஆண்டு திறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட பிரதமர் மோடி, புரி ஜெகநாதரின் ஆலயத்தின் கருவூல அறையின் சாவியானது, தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்டுவிட்டது. அந்த சாவியை தமிழ்நாட்டுக்கு அனுப்பியவர்கள் யார்..? கொண்டு போனவர்கள் யார்...? இவர்களை உங்களால் மன்னிக்க முடியுமா..? என கேள்வி எழுப்பினார்.

பிரதமர் மோடியின் பேச்சுக்கு, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி கார்த்திகேயன் பாண்டியன்; பிரதமருக்கு, இதுகுறித்து தெரியுமென்றால், அவரிடம்தான் பல அதிகாரிகள் உள்ளனர். அவர்களுக்கு, அதைப்பற்றி தெரிந்திருக்க வேண்டும். சாவியை கண்டறிந்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்" என கார்த்திகேயன் பாண்டியன் கூறியிருந்தார். பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி பேசியது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஒடிசா வளர்ச்சிக்காக மோடி அரசு கொடுக்கும் நிதியை தமிழ்நாட்டு ஒப்பந்ததாரர்கள் கொள்ளையடிக்கின்றனர் என தமிழர்கள் மீது வெறுப்பை தூண்டும் விதமாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தேர்தல் பிரசாரத்தில் பேசியது சர்ச்சையாக மாறியுள்ளது. பூரி ஜெகன்நாதர் கோயில் கருவூல சாவி தமிழ்நாட்டுக்குச் சென்றுவிட்டது என பிரதமர் மோடி பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தற்போது அமைச்சரும் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement