Tamilisai Soundararajan | கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுகிறாரா தமிழிசை சௌந்தரராஜன்..!! அப்படினா ஆளுநர் பதவி..?
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக தற்போதைய தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரியில் காங்கிரஸ் வேட்பாளராக தற்போதைய எம்பி, விஜய் வசந்த் மீண்டும் போட்டியிடுவார் என கூறப்படுகிறது. அதேபோல் பாஜக சார்பில் விஜய் வசந்தின் நெருங்கிய உறவினரான தமிழிசையை களமிறக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அங்கு போட்டியிட்டு தோற்ற முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிட வாய்ப்பை எதிர்பார்த்து தவமாய் தவம் கிடக்கிறார்.
இந்நிலையில், ஹைதராபாத்தில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அளித்த பேட்டியில், ”கடவுள் கருணை இருந்தால், பாஜக மேலிடம் வாய்ப்பு கொடுத்தால் கண்டிப்பாக போட்டியில் இருப்பேன். நான் ஒரு சாதாரண பாரதிய ஜனதா உறுப்பினர். எனக்கு அளிக்கப்பட்ட பணிகளை திறம்பட செய்து முடிப்பேன். எதிர்காலத்தில் பாஜ மேலிடம் என்னை எந்த பதவிக்கும் போட்டியிட நியமித்தாலும் அதனை செய்வேன்” என்று கூறினார்.
Read More : Lok Sabha | 7 கட்டங்களாக மக்களவை தேர்தல்..? தேர்தல் ஆணைய வட்டாரங்கள் பரபரப்பு தகவல்..!!