முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Tamil Web Series | இந்த 8 தமிழ் வெப் சீரிஸ்களை பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க..!! செம கதை களம்..!!

Web series watchers, if you missed these 9 stories, enjoy watching.
01:37 PM Sep 19, 2024 IST | Chella
Advertisement

தற்போதைய காலகட்டத்தில் திரையரங்கிற்கு சென்று படம் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. திரையரங்குகளில் வெளியாகும் படம், சில மணி நேரங்களில் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் நிலையில், அதை டவுன்லோடு செய்து பார்க்கும் கூட்டம் ஏராளம். அதுவும் ஹாட்ஸ்டார், அமேசான், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி தளத்தில் ஹெச்.டி. குவாலிட்டியில் திரைப்படம், வெப் சீரியல் உள்ளிட்டவை இருப்பதால், திரையரங்கிற்கு செல்வதை பலர் மறந்துவிட்டனர்.

Advertisement

தற்போது, பெரிய பெரிய நடிகர்கள் நடிகைகள் கூட வெப் சீரிஸ் பக்கம் அடியெடுத்து வைத்துள்ளனர். முன்பெல்லாம் இது போன்ற கதைகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் தான் அதிகமாக வரும். ஆனால், அவற்றிற்கு போட்டியாக தற்போது தமிழிலும் சுவாரஸ்யமான வெப் சீரியஸ்கள் வெளியாகி வருகின்றன. அப்படி வெப் சீரிஸ் பார்ப்பவர்கள், இந்த 9 கதைகளையும் மிஸ் செய்திருந்தால் பார்த்து மகிழுங்கள்.

விலங்கு : வெள்ளித்திரையில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த விமலுக்கு, விலங்கு வெப் சீரிஸ் பெரிய அளவில் கை கொsடுத்தது. ஒரு கிராமத்தில் நடக்கும் தொடர் குற்றங்களை விசாரணை செய்யும் போலீஸ் அதிகாரியாக விமல் நடித்திருப்பார்.

அயலி : வீரப்பனை என்னும் கிராமத்தில் 500 ஆண்டுகளாக பெண்களை ஒடுக்கி வைக்கும் நிறைய சம்பிரதாயம், சடங்குகளை பின்பற்றி வருவார்கள். இந்த அடக்குமுறைகளை தாண்டி தமிழ்ச்செல்வி என்னும் பெண் டாக்டர் ஆகும் கனவை நோக்கி எப்படி நகர்கிறார் என்பது தான் கதை.

வதந்தி : இந்த வெப் சீரிஸ் கன்னியாகுமரி மாவட்டத்தை சுற்றி நகர்கிறது. ஒரு பெண் மர்மமான முறையில் உயிரிழந்துவிடுகிறார். அவளை கொலை செய்தது யார்? அவளை பற்றி பேசப்படும் வதந்தி உண்மைதானா? என்பதை போலீஸ் கண்டுபிடிக்கிறது. 8 எபிசோடுகள் நிறைந்த இந்த வெப்சீரிஸில், அடுத்த கட்ட நகர்வு என்பது சுவாரஸ்யம் அதிகமாக இருக்கும். இந்த கதைக்கு எஸ் ஜே சூர்யா தன்னுடைய சிறந்த நடிப்பால் உயிர் கொடுத்திருக்கிறார்.

நவம்பர் ஸ்டோரி : தமன்னா நடிப்பில் வெளியான வெப் சீரிஸ் தான் நவம்பர் ஸ்டோரி. மர்மம் நிறைந்த கொலையை கண்டுபிடிக்கும் திரைக்கதை அமைப்பு இது. 7 அத்தியாயங்களை கொண்ட இந்த சீரிஸ் நல்ல வரவேற்பு பெற்றது.

தலைமை செயலகம் : இது அரசியல் பேசும் கதைக்களம் கொண்டது. முதலமைச்சரின் ஊழல் மற்றும் ஒரு கொலை வழக்கை கண்டுபிடிப்பதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைக்கதை இது.

சுழல் : ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பார்த்திபன் முக்கியமான கேரக்டரில் நடித்த வெப் சீரிஸ் சுழல். 18 வயது நிரம்பாத ஒரு பெண் மாயமாவதும், அதை கண்டுபிடிக்க நடத்தப்படும் விசாரணையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட கதைதான் இது.

பேட்டைக்காளி : கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வெப் சீரிஸ் தான் பேட்டைக்காளி. ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட வெப் சீரிஸ் இது.

செங்களம் : கலையரசன், நடிகை வாணி போஜன் நடித்திருக்கும் வெப் சீரிஸ் செங்களம். இது பழி வாங்கும் கதை படலத்தை மையமாக கொண்டது. இந்த வெப் சீரிஸ் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரிலீஸ் ஆகியுள்ளது.

Read More : கோயிலில் வெடித்த சண்டை..!! அசிங்க அசிங்கமாக திட்டிய ஜிபி முத்து..!! வெளியான வீடியோ..!!

Tags :
tamil web seriesசினிமாவெப் சீரிஸ்
Advertisement
Next Article